கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரள வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை ஏற்படுத்திவிட்டது.கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத துயரங்களை அனுபவித்துவிட்டார்கள்.இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இன்னும் பலஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது கேரள மக்கள் மெல்லமெல்ல இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகின்றார்கள்.இதற்கு கேரள அரசும் பெரும் துணையாக இருந்து வருகிறது.இதுதொடர்பாக கேரள முதல்வர் பிரனராயி விஜயன் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விளக்கி வருகிறார்.

 

அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது ,வெள்ள பாதிப்பினால் ஏற்படும் சேதம் குறித்து ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் தற்போது பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கேரளாவை மறுசீரமைப்பது மிகவும் கடினம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கேரளாவைத் திரும்பவும் மறுசீரமைக்க வேண்டும். முதற்கட்ட மீட்புப் பணிகள் முடிந்து விட்டன. தற்போது  மறுகட்டமைப்புப் பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரள மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப கேரள அரசு உறுதுணையாக இருக்கும் என  பிரனராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

 

மேலும் அவர் உறுதியளித்ததோடு நில்லாமல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.வீடுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து கொள்கிறார். வீடுகளை புனரமைக்க முடியாத  நிலையிலுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்படக்கூடாது என கண்டிப்புடன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் முகாமிலிருந்து வீடு திரும்பியவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 உடனே வழங்க ஆணையிட்டுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS