'தாடியில பூ வைக்குறதா?'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்!

Home > தமிழ் news
By |

பத்து வருட சேலஞ்சினை அடுத்து ஆண்களின் தாடியில் பூ வைக்கும் புதிய சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது.

பொதுவாக பெண்கள் கூந்தலுக்கு பூ அணிவதும் காதுக்கும் கால்களுக்கும் அணிகலன்களை அணிவதும் வழக்கமாக இருக்கும். ஆனால் ஆண்கள் பலரும் தங்கள் புருவங்களில் காதுகளில் கம்மல்கள் மற்றும் கடுக்கங்களை போடத் தொடங்கிய ட்ரெண்டினை சுமார் 15 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவில் தொடங்கிவிட்டனர்.  வெளிநாட்டில் அதற்கும் முன்னரே அந்த ட்ரெண்டினை தொடங்கியிருப்பார்கள்.

அணியும் அணிகலன்கள், ஆடைகள் முதலான விஷயங்களில் இருந்துதான் எப்போதுமே புதிய கலாச்சாரம் தொடங்கும். அதனால்தான் ஃபேஷன் டிசைனர்கள் எப்போதும் புதிய ட்ரெண்டியான ஆடை அணிகலன்களை அணிவதோடு, அறிமுகப்படுத்தவும் செய்வார்கள். இவற்றை ஒரு சமூகத்துக்கு கடத்தக் கூடியவர்களாக நடிப்புக் கலைஞர்களும் முக்கிய பங்கு வகிப்பதுண்டு. நகையோ, ஆடையோ, குளியல் பொருட்களோ, முக கிரீமோ, உதட்டுச் சாயமோ எல்லாவற்றிலும் மாடல்கள்தான் மக்களுக்கு இவற்றை அறிமுகம் செய்கிறார்கள்.

ஆனால் அவற்றை விளம்பரத்துக்காக செய்யாமல் விரும்பி செய்பவர்களும் மாடல்கள்தான். அதாவது அவர்கள் ஒரு புதிய ட்ரெண்டின் முன்னோடிகள் என்று அவர்களைச் சொல்லலாம். ஆதிகால திருவள்ளுவர் கொண்டைகளும், அப்போதைய அனார்கலி ரக ஆடைகளும் மீண்டும் தமிழ்ச் சமூகத்துக்குள் ட்ரெண்டுகளாகி வரத் தொடங்கியுள்ளது போலத்தான். இவற்றின் வழியே இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஒரு புதிய அலையாக தாடிக்கு பூ வைக்கும் புதிய ட்ரெண்டு வலம் வரத் தொடங்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் திருமண புகைப்பட ஷூட்களில் ட்ரெண்ட் ஆகும் இத்தகைய கலாச்சாரம் ஆண்களின் விதவிதமான தாடிகளில் பலவகையான டிசைன்களில் பூக்களைச் செருகி வைப்பதுதான். விரைவில் இந்தியாவிலும் பரவலாம் என்று நம்பப்படும் இந்த புதிய சேலஞ்சின் புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன.

TREND, VIRAL, BEARD, INSTAGRAM, FLOWERS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS