தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று அதிகாலையில் சென்னை சாலிகிராமம், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதற்கென நேற்று நள்ளிரவு முதல் ஆலோசித்து வந்த போலீசார் பல போலீசாருடனும், போலீஸ் வாகனங்களுடனும், சென்னை வடபழனி காவல் நிலையத்தின் முன்பாக குவிந்தனர். அதிகாலை 5 மணி அளவில் சாலிகிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் 6.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் மற்றும் போலீசார், கருணாஸை கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பொது அமைதிக்கு பங்கம், அவதூறு பேச்சு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் விசாரணைக்கு பின் நீதிபதி வீட்டில், கருணாஸை போலீசார் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- எக்ஸர்சைஸ் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- இறந்த நடிகரின் பூத உடலுடன் செல்ஃபி.. செவிலியர்கள் பணிநீக்கம்!
- Hospital Staff Take Selfie With Nandamuri Harikrishna's Body; Sacked From Job
- இறங்கி சென்று இறகு பந்து விளையாடிய முதல்வர்.. வைரல் வீடியோ உள்ளே!
- முதல்வர் ’பஞ்ச்’.. எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது!
- மத்திய, மாநில அரசுகளை நேரடியாக சாடிய திமுகவின் ‘புதிய’ தலைவர்!
- கொஞ்சம் சத்தமா சொல்லிப்பாருங்களேன் முதலமைச்சரே?
- 'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி!
- கேரள மக்களுக்கு.. தமிழக அரசு நிவாரணப்பொருட்கள்+10 கோடி நிதியுதவி அறிவிப்பு!
- CM Edappadi Palaniswami replies to Kerala's SOS