திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் தற்போது அவரது நலமாக இருக்கிறார் எனவும், நேற்று இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

எனினும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் சற்றுமுன் அவர் அளித்த பேட்டியில், "திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவர்களின்  தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

 

இதேபோல, ''திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது.கட்சி தொண்டர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை,'' என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

''மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தோம்.குறிப்பாக அவரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு இயல்பாக உள்ளது.எந்த ஒரு மருத்துவக் கருவியின் உதவியின்றி கருணாநிதி இயல்பாக உள்ளார்,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS