யானை மீது 750 கிலோ எடை கொண்ட அம்மன்.. மைசூர் தசரா விழா!

Home > தமிழ் news
By |

மைசூரு தசரா விழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற இவ்விழாவின் ஒரு பகுதியாக ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் சுமார் 72 கலைக்குழுவினர் 45 அலங்கார வண்டிகள் பங்கேற்கின்றன. இந்த ஊர்வலத்தை முதல்வர் கர்நாடக குமாரசுவாமி, தன்னுடைய அரண்மனை வளாகத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.


மேலும் அர்ஜுனா என்கிற யானை  அலங்கரிக்கப்பட்டு, அதன் மேல் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியில் சாமூண்டீஸ்வரி அம்மன், ஊர்வலமாக மைசூர் நகரின் முக்கிய சாலைகளில் பவனவந்து பண்ணிமண்டபம் வந்தடைகிறது.


அதுமட்டுமல்லாமல், இதனைக்காண தசரா விழாவைக்காண பல்லாயிரம் பேர் மைசூருவில் முகாமிட்டுள்ளனர். விழாவையொட்டி மாநகரம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த நிலையில் இன்று அரண்மனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

VIJYADASHMI, KARNATAKA, MYSORE, INDIA, HINDUFESTIVALS, RITUALS, DASARA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS