'கர்நாடக காங்கிரஸ் கூட்டணிக்கு தீபாவளி ட்ரீட்'...கொடுத்த கர்நாடக மக்கள்!

Home > தமிழ் news
By |

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால்,இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமான தேர்தலாக கருதப்பட்டது.

 

இந்நிலையில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஷிமோகா மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

 

ரெட்டி சகோதரர்கள் கோலோச்சும் தொகுதியாக கருதப்பட்டு வந்த பெல்லாரியில், 2004 முதல் பாஜக தான் வெற்றி பெற்று வந்தது.இந்த தொகுதி பாஜகவின் கோட்டை எனவர்ணிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பெல்லாரி தொகுதியியில்  2,43,161 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

இந்நிலையில் இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து காங்கிரஸ் - மஜத தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

BJP, CONGRESS, KARNATAKA KARNATAKA BY-ELECTION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS