‘கொஞ்சம் எனக்கு புரியுற மாதிரி சொல்றீங்களா?’.. கனிமொழியின் வைரல் பேச்சு!
Home > தமிழ் newsதிமுக எம்.பி கனிமொழி உயர்சாதி ஏழைகளுக்கான பொருளாதார ரீதியலான இடஒதுக்கீடு மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய போது, இந்தியில் பேசிய துணை சபாநாயகரிடம் தனக்கு புரிகிற மொழியில் பேசச் சொல்லி கேட்டுள்ள சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
உயர்சாதி ஏழைகளுக்கான பொளாதார ரீதியலான 10% இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக, திமுக, ஆர்.ஜே.டி கட்சிகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் இதற்கான எதிர்ப்பு வாக்கினை திமுக மற்றும் ஆர்.ஜே.டி கட்சிகள் அளித்த நிலையில் அதிமுக வாக்களிக்காமல் பின்வாங்கியதோடு வெளிநடப்பும் செய்தது.
பின்னர் மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி பேசுகையில் மத்திய அரசு எதன் அடிப்படையில் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியது என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் தன்னிச்சையான முடிவினை விமர்சித்த அவர், மேலும் பட்டியல் இன மக்கள் படிக்கும் இடங்களிலும், பணி புரியும் இடங்களிலும் சாதிய பாகுபாட்டால் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தன் பேச்சின் தொடக்கத்தில் கனிமொழி, தேர்தல் நோக்கத்தில், மிக அவசரமாக மோடி அரசு இந்தச் சட்டத்தை கொண்டுவருவதாவும், இந்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பும் இங்கு வெகுசிலரையும் பேசவிடாமல் தடுத்தால் எப்படி? என்று சொல்லி பேச்சைத் தொடர்ந்தார்.
பின்னர் பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு என்பது சரியானதல்ல என்றும், ஒரு நாட்டில் மதம்-பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும்; ஆனால் சாதி மாற்றவியலாததாக இருக்கிறது என்றும் இந்த மசோதாவுக்கு எதிரான தனது பார்வையை, கனமொழி முன்னிறுத்தி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர், கனிமொழியை சீக்கிரம் பேசி முடிக்குமாறு இந்தியில் அறிவுறுத்தினார். அதனைக் கேட்டு கனிமொழி ‘மன்னிக்கவும்... நீங்கள் சொன்னதை கொஞ்சம் எனக்குப் புரியும்படியான மொழியில் சொல்ல முடியுமா?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு துணை சபாநாயகர், ‘உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் எப்போதோ முடிந்துவிட்டது. சீக்கிரம் பேசி முடியுங்கள்’ என்று இந்தியில் சொன்னதையே ஆங்கிலத்தில் கூற, அதற்கும் கனிமொழி பல லட்சம் ஒடுக்கப்பட்ட குரல்களின் பிரதிநிதியாக நான் பேச வேண்டும் என்று கூறி உரையைத் தொடர்ந்துள்ளார். கனிமொழியின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'கட்சி பணத்த செலவு பண்ணுங்க'..பொங்கல் பரிசு விஷயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி!
- போன் பேசிக்கொண்டே போய் கிணற்றில் விழுந்த பெண்.. காப்பாற்ற வந்தவர்களுக்கும் நடந்த பரிதாபம்!
- 'போடு தகிட தகிட'.. தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவித்த தமிழக அரசு!
- தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
- பேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்?
- உற்சாகத்தில் பள்ளி மாணவியருடன் சேர்ந்து நடனமாடும் எம்.பி.. வைரல் வீடியோ!
- பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை!
- இடைத் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணம்.. ‘மினி சட்டமன்ற தேர்தல்’ கேட்கும் ஸ்டாலின்!
- வாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை!
- உங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்!