திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஜூலை 28ம் தேதி அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு UTI எனப்படும் சிறுநீர்ப் பாதைத் தொற்று நோய்க்குறி இருப்பதாக அறிவித்திருந்தனர். மேலும் அவர் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தமிழக முதல்வர் பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று காலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

 

இந்நிலையில் கருணாநிதியின் மகளும், திமுக எம்பி-யுமான கனிமொழி, ''திமுக தலைவர் கருணாநிதி பூரணமாக உடல்நலம் பெற்று வருவதால், வெளியூரில் இருந்து வந்து காவேரி மருத்துவமனைக்கு முன் இரவு-பகலாக காத்திருக்கும் திமுக தொண்டர்கள் இனி ஊருக்குச் செல்லலாம்,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS