இவர் என்ன பறவையா? இல்ல மனுஷனா?.. ஹைதராபாத் கேப்டனைப் புகழும் ரசிகர்கள்!
Home > தமிழ் newsநேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி20 போட்டியின்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி 20 போட்டிகளில் ஆடிவருகிறது.முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இந்தநிலையில் நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 2-வதாக பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.5-வது ஓவரின் போது ஜமான் அடித்த பந்து வில்லியம்சனை விட்டு விலகிச்சென்றது.
எனினும் மனம் தளராத வில்லியம்சன் அந்தரத்தில் தாவிப்பறந்து அந்த பந்தினை அற்புதமாக கேட்ச் பிடித்தார். பறவை போல அவர் பறந்து பிடித்த இந்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைக்கண்ட ரசிகர்கள் இவர் மனிதனா? இல்லை பறவையா? என்று வில்லியம்சனைப் பாராட்டி வருகின்றனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த வில்லியம்சன், அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி 2-வது இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Watch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- Shocking Video: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 'அதிரடியாக குண்டுவீசி' தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்!
- 'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!
- அனைத்து 'சர்வதேசப் போட்டிகளிலும்' இருந்து ஓய்வு பெறுகிறேன்: சிஎஸ்கே வீரர் உருக்கம்!
- ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- ஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்!
- "கிரிக்கெட் வரலாற்றில் காணாத ரன் அவுட்":அதிர்ந்த பேட்ஸ்மேன்!
- WATCH VIDEO | This Is One Of The Most Comical Run Outs Seen On The Cricket Field
- "3 ஸ்டம்பையும் காட்டியபடி தில்லாக விளையாடிய கேப்டன்":வைரலாகும் புகைப்படம்!