'தம்பி பாசத்த இப்படியா காட்டுறது':விக்கெட் கீப்பரின் செயலால்...கடுப்பான பௌலர்!

Home > தமிழ் news
By |

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் அலட்சியமான விக்கெட் கீப்பிங், பவுலர் ரஷீத் கானை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வெறுப்பேற்றியது.

 

டி20 லீக் தொடர்களை போன்று 10 ஓவர்களை கொண்ட டி10 லீக் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.இந்த ஆண்டிற்கான போட்டிகள்,கடந்த 21ம் தேதி தொடங்கியது.இந்த போட்டிகள் வரும் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் டுவைன் பிராவோ தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் மற்றும் லூக் ரோஞ்சி தலைமையிலான பஞ்சாபி லெஜண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியில் பாகிஸ்தானின் உமர் அக்மலும் அவரது அண்ணன் கம்ரான் அக்மல் மராத்தா அரேபியன்ஸ் அணியிலும் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் பேட்டிங்கின்போது 8வது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை உமர் அக்மல் இறங்கிவந்து அடிக்க முயன்றார். ஆனால் ரஷீத் கான் ஆஃப் திசையில் விலக்கி வீசியதால் அந்த பந்தை அவரால் அடிக்க இயலாமல் விட்டு விட்டார்.ஆனால் அந்த பந்தை பிடித்து உமர் அக்மலை ஸ்டம்பிங் செய்யாமல், அலட்சியமாக பிடிக்க முயன்று விட்டுவிட்டார் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல்.

 

இந்த செயலால் பௌலர் ரஷீத் கான் கடுமையாக எரிச்சலடைந்தார்.மிகவும் எளிமையாக வீழ்த்தியிருக்க வேண்டிய விக்கெட்யை தம்பிக்காக வேண்டுமென்றே விட்டு விட்டாரோ,என ரசிகர்களும் கடுப்பானார்கள்.எனினும் அடுத்த ஓவரில் கம்ரானிடமே  கேட்ச் கொடுத்து வெளியேறினார் உமர். இது தான் இந்த போட்டியில் வேடிக்கையாக அமைந்தது என ரசிகர்கள் ட்விட்டரில் கிண்டலடித்து வருகிறார்கள்.

CRICKET, KAMRAN AKMAL, UMAR AKMAL, T10 LEAGUE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS