ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது: கமல் காட்டம்!

Home > தமிழ் news
By |

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதைப் போலவே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் தன்னாலான நிவாரண உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்.

 

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஹெலிகாப்டர் மார்க்கமாக சென்று பார்வையிட்டார். எனினும் முழுமையாய் பார்வையிடாமல் திரும்பியதால் பெரும் விமர்சனங்கள் மேலெழும்பின.

 

இதனை விமர்சிக்கும் வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?” என்று கேட்டுள்ளார்.

 

வேறொரு பதிவில் “அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” என்று நெகிழ்ந்துள்ளார்.

KAMALHAASAN, EDAPPADIKPALANISWAMI, GAJACYCLONE, TAMILNADU, GAJACYCLONERELIEF

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS