‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்!

Home > தமிழ் news
By |
‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்!

கஜா புயல் தமிழகத்தை சூறையாடியதை அடுத்து மாநிலம் முழுவதும் அனைவரும் முழுமூச்சில் நிவாரண, மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது இன்றைய ட்வீட்டில், ‘இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது’ என்று கூறியுள்ளார். 

 

மேலும், ‘அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மய்யத்தின் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார். 

 

GAJACYCLONE, KAMALHAASAN, TAMILNADU, TNGOVT, RESCUE, TNDISASTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS