ஜெ.வின் பிறந்த நாளைக் கொண்டாடும் அவர்களால், இறந்த நாளை சொல்ல முடியுமா?

Home > தமிழ் news
By |

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் கொடியேற்றிய கமல், அடுத்து எங்கே ஏற்றி வைக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும் என்று பஞ்ச்’சாக ட்வீட் போட்டார்.

பின்னர் திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பழம்பெருமைகளைக் கொண்ட திருவாரூரில் பின்னாளில் குடும்ப அரசியல் மேலோங்கியது. அதை மாற்றவே அங்கு பேசுவதாக தெரிவித்த கமல், தன்னுடையது குடும்ப அரசியல்தான். ஆனால் தன் குடும்பத்தில் 8 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், எம்ஜிஆர் போட்ட இலையை இரண்டாக பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் தற்போது உள்ளவர்கள். ஜெயலலிதா பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களால் ஜெயலலிதாவின் இறந்த நாளை சொல்ல முடியுமா அவர்களால்? அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கிறார்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை இன்னும் சரிசெய்யாதவர்களுக்கு பொங்கல் பரிசுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து திருடிக்கொண்டிருக்கிறார்கள். நான் அரசியல் செய்வது என் கடமை, சினிமா என் தொழில். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிக்கவும். ஆனால் டெல்டா மக்களுக்காக உதவ வேண்டும். நீரை சேமித்து அவர்களின் விவசாய முறைக்கு உதவ ஒன்றுகூட வேண்டும் என்று கூறினார்.

MAKKALNEEDHIMAIAM, 1YEAROFMNM, KAMALHAASAN, MAIAMOFFICIAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS