நேற்று மாலை 6.10 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவரது பூத உடல் அஞ்சலி செலுத்தப்படுவதற்காக வேண்டி, சென்னை ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் திரை, அரசியல் பிரபலங்களும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

இதனிடையே கலைஞரை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு மறுத்து வந்தது. பின்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் நீண்ட பெரும் போராட்டத்துக்கு பிறகு கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்தது. 

 

இதனையடுத்து, திராவிட முன்னேற்றத்தின் கழக அறிக்கை தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் கலைஞரின் புகழுடல் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று (ஆகஸ்டு 08, 2018) மாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையை கடந்து, அங்கிருந்து வாலஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலைஞரின் பூத உடலை எடுத்துச் செல்வதற்கென, அலங்காரம் செய்யப்பட்ட ராணுவ வாகனம் வந்தடைந்ததை அடுத்து, அவர் மேற்சொன்ன வழியில் எடுத்துச் செல்லப்படுகிறார். 

BY SIVA SANKAR | AUG 8, 2018 1:52 PM #MKSTALIN #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #DMK #KALAIGNAKARUNANITHI #KARUNANITHIFUNERAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS