நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மெரினா கடற்கரை அண்ணா சமாதியில் கலைஞரின் நல்லடக்கத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதற்காக கட்டுமானத்திற்கான பொருட்கள் அண்ணா நினைவிடத்திற்கு கொண்டுவரப்பட்டன.

 

திமுக தலைவர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியது. இது திமுகவினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டு நேற்றிரவு முழுதும் நடந்த வாதம் காலையிலும் தொடர்ந்தது.

 

இதையடுத்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்  கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைக்கேட்ட ஸ்டாலின் மற்றும்  கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் வடித்தனர்.

 

மேலும் அடக்கம் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்ய துரைமுருகன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு நடத்தினர்.அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் ஆய்வில் கலந்துக்கொண்டனர்.

 

கருணாநிதியின் உடல் அடக்கம் அண்ணா சதுக்கம் பின்புறம் அவர் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்படுகிறது. இதை  அடுத்து அண்ணா சதுக்கத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS