அடேங்கப்பா.. அப்பல்லோவில் ‘அம்மா’ உண்ட உணவுக்கு ஆன செலவு இவ்வளவா?

Home > தமிழ் news
By |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவ சிகிச்சையின்போது உண்ட உணவுக்காக மட்டும், ரூ. 1 கோடியே 17 லட்சம் செலவாகியதாக  அப்பல்லோ மருத்துவமனையின் பேரில் வெளியாகியுள்ள பில் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன மொத்த மருத்துவமனை சிகிச்சைக்கான கட்டணத் தொகை ரசீதை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

 

அதில்  செப்டம்பர் 12-ஆம் தேதி, 2016-ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா உண்ட உணவுக்கு மட்டும் ரூ. 1 கோடியே 17 லட்சமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே அளித்த சிகிச்சைக்கான தொகை 92 லட்சம் உட்பட மொத்தமாக ரூ. 6 கோடியே 85 லட்சமும் செலவாகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் சிங்கப்பூர் பிஸியோதெரபி சிகிச்சை, அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட பணத்தொகை என பல விபரங்கள் அதில் இருந்தாலும், இந்த பில் தொகை ரசீதைப் பற்றிய உண்மைத் தன்மையும், இந்த செலவெல்லாம் ஜெயலலிதா எனும் ஒரு ஆள் மட்டும் உந்தற்கான செலவுதானா என இன்னும் அதிகாரப் பூர்வமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

APOLLO, JAYALALITHA, HOSPITAL, XCHIEFMINISTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS