செயற்கைக்கோள் வரைபடத்தில் இருந்தே காணாமல் போன தீவு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

Home > தமிழ் news
By |

சில சினிமாக்களில்தான் இப்படி நடக்கும். ஜப்பானில் ஒரு தீவு செயற்கைக் கோள் வரைபடத்தில் இருந்து ஒரு தீவே காணாமல் போயிருக்கிறது என்பது ஜப்பானின் புவியியல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


ஒரு கால கட்டத்தில் ஜப்பானே உலக வரைபடத்தில் இருந்து அழியும் நிலைக்குச் சென்று தன் மனிதவள ஆற்றலால் மீண்டு மேலெழும்பி வந்துள்ளதை உலகம் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.


அந்த ஜப்பானின் எஸான்பி ஹனகிடா கொஜிமாவில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது சர்ஃபுஸ்து எனும் இடம். மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வாழ்வாதார சூழல் இல்லாத 158 தீவுகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த இடம்தான் செயற்கைக் கோளின் நில வரையறையில் இருந்து காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக கடற்பரப்பின் அரிப்பினாலும், வேகக் காற்றினாலும் காணாமல் போயிருக்கலாம் என்றும் கடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதப்படுகிறது.  ஹிரோஷி ஷிம்ஸூ என்கிற எழுத்தாளர் இதனை முன்பே தனது புனைவு எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளதுதான் கூடுதல் ஆச்சரியம். எனினும் இதன் உண்மைத் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

JAPAN, ISLAND, MYSTERY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS