திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மருத்துவமனைக்கு வெளியே இரவு-பகலாக காத்திருக்கும் தொண்டர்களுக்கு உணவு,தண்ணீர் வழங்கலாமே என டிவிட்டரில் தொண்டர் ஒருவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனைப்பார்த்த ஜெ.அன்பழகன், ''உங்களின் யோசனைக்கு நன்றி. கருணாநிதியைப் பார்க்க வருபவர்களுக்கு மனதளவிலே சோகம் இருக்கணும். உடலளவில் சோகம் இருக்கக் கூடாது.நாளைமுதல் தொண்டர்கள், செய்தியாளர்களுக்கு உணவு,குடிநீர் வழங்கப்படும்,'' என தெரிவித்தார்.அதேபோல நேற்றுமுதல் உணவும் வழங்கி வருகிறார்.
அன்பழகனின் இந்த செயல் தொண்டர்கள்,பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது'.. தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை!
- Karunanidhi health: After CM Palaniswami, TN ministers visit hospital
- It’s a medical miracle: Vaiko on Karunanidhi’s health
- After Vice President, CM Palaniswami sees Karunanidhi in person
- CM Palaniswami reaches Kauvery Hospital
- "Karunanidhi's health is better": Kanimozhi returns to Kauvery Hospital
- 'திரும்பி வா தலைவா'.. தொண்டர்களின் கோஷத்தால் அதிரும் மருத்துவமனை வளாகம் .. வீடியோ உள்ளே!
- காவேரி மருத்துவமனைக்கு ஆ.ராசா மீண்டும் வருகை
- 'தொண்டர்களை வெளியேற்றும் போலீஸ்'.. தடியடி வீடியோ உள்ளே!
- Kauvery Hospital says Karunanidhi's health is better post a brief setback