‘ஆஸ்திரேலிய தொடரில் அவர் காப்பாத்தலன்னா எனது கேப்டன் பதவி பறிபோயிருக்கும்’!

Home > தமிழ் news
By |

பிரபல கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான கங்குலி ஒரு கருத்தரங்கத்தில்  விவிஎஸ் லக்ஸ்மன் எழுதிய  ‘281 and Beyond’ என்கிற சுயசரிதை புத்தகத்தை பற்றி பேசும்போது ‘இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும் அனைத்தும் சரிதான். ஆனால், புத்தகத்தின் தலைப்புதான் நெருடலை உண்டாக்குகிறது’ என்று கூறியிருக்கிறார். 

 

உடனடியாக அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து பேசிய கங்குலி, ‘கடந்த 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆகி 171 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அப்போது களத்தில் 631 நிமிடங்கள் நின்று 452 பந்துகளுக்கு 281 ரன்களை எடுத்தார் விவிஎஸ் லக்ஸ்மண்’ என்று கூறினார். 

 

மேலும் பேசிய கங்குலி ‘உண்மையில் அவர் இல்லை என்றால் அன்று கேப்டனாக இருந்த எனது பதவி அப்போதே பறிபோயிருக்கும். அவர் அத்தனைச் சிறப்பாக விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியை பற்றிய இந்த சுயசரிதை புத்தகத்தின் தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை. அந்த புத்தகத்தின் தலைப்பு 281 and beyond and that saved Sourav Ganguly’s career என்று இருந்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.  அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது. 

 

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடர் கிரிக்கெட் போட்டிகளை  தற்போது விளையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

SOURAVGANGULY, VVSLAXMAN, CRICKET, INDIA, 281 AND BEYOND, AUSVIND2001, TEAMINDIA, VIRATKOHLI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS