சரவணா ஸ்டோர்ஸ் ‘பிரம்மாண்டமாய்’: கணக்கில் வராத 433 கோடி ரூபாய் பணம், தங்கம், வைரம்!

Home > தமிழ் news
By |

தமிழகத்தில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அன்று சரவணா ஸ்டோருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அப்போது தொழிலதிபர் யோகரத்னம் பொன்னுதுரைக்கு சொந்தமான சரவணா ஸ்டோர்ஸ் ‘பிரம்மாண்டமாய்’ என்கிற பெயருடைய கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் யோகரத்னம் பொன்னுதுரையின் விசுவாசியான ராமஜெயன் என்கிற பாலாவின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜி ஸ்கொயர் மற்றும் லோட்டஸ் நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆனால் சோதனை  முடிவுகளை 9 நாட்கள் எடுத்துக்கொண்டு ஆய்வுசெய்துவிட்டு அறிவிப்பதாக வருமான வரித்துறை கூறியிருந்தது. இந்நிலையில் இந்நிறுவனங்கள் ரூ.433 கோடி அளவிற்கு வருமான வரிக்கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. அதோடு 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் ஆகியவையும் வருமான வரியின் முறையான கணக்கில் வரவில்லை என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா இணையதளத்தின் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் தொழிலதிபர் பாலா, வேறு ஒருவரிடம் கணக்கில் வராத விபரங்களையும், இன்னும் பிற அசையும் சொத்துக்களையும், பணத்தையும், சில முக்கிய ஆவணங்களையும் கொடுத்து, சூப்பர் யூட்டிலிட்டி வாகனம் ஒன்றில் வைத்து சென்னை சிட்டி முழுக்க சுற்றவிட்டிருந்தார் என்றும், அதனை போலீஸாரின் உதவியுடன் கைப்பற்றியுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பாலா மற்றும் யோகரத்னம் பொன்னுதுரைக்கு இடையேயான வங்கிப் பணப்பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகவும் ஆனால் அவையும் முறையாக கணக்கில் வரவில்லை என்று கூறிய அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களும் சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

SARAVANASTORES, ITRAID, CHENNAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS