‘பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்.. ஆளுநர் ஆட்சியா இது?’:வைகோ கேள்வி!

Home > தமிழ் news
By |

சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த  நக்கீரன் கோபாலை விமான நிலையத்தில்  வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.  சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியவரான நக்கீரன் கோபால்,  பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் தமிழக ஆளுநர் பற்றிய அவதூறு செய்தி வெளியிட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில், 124 A பிரிவின் கீழ் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டார்.


இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நக்கீரனை பார்க்கச் சென்ற மதிமுக தலைவர் வைகோ, தன்னை அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும், கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், ‘இது என்ன அரசாட்சியா? அல்லது ஆளுநர் ஆட்சியா? ஏன் இந்த அரசு சுதந்திரமான பத்திரிகையாளர்களின் குரல்வலையை நெறிக்கிறது’என்று கேள்வி எழுப்பினார்.

 

இறுதியில் நீதிமன்றம், ‘இந்த வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது’ எனச்சொல்லி, நக்கீரன் கோபாலையும், வைகோவையும் அடுத்தடுத்து விடுதலை செய்தது. 

NAKKEERANGOPALARREST, VAIKOARREST, NIRMALADEVI, GOVERNOR, TAMILNADU, STATEGOVT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS