பலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா?.. சட்டசபையில் நடந்தது என்ன?

Home > News Shots > தமிழ் news
By |

தமிழகத்தின் பலருக்கும் முக்கியமான தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு ஆப்பாக இருக்கும் டிக்டாக் செயலியை தடை செய்யக் கோரப்போவதாக அமைச்சர் ஒருவர் அறிவித்தது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர், கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டிக்டாக் செயலியை முதலில் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவிருப்பதாகக் கூறினர். அதற்கும் முன்னரே பாமக நிறுவனர் ராமதாஸ் இதுபோன்ற செயலிகளை தடைசெய்வதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், 'டிக் டாக்' செயலியைத் தடை செய்வதற்கான கோரிக்கையை தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ முன்வைத்தார்.  அமைச்சர் மணிகண்டன் தமீமுன் அன்சாரி  வைத்த கோரிக்கையை வலியுறுத்த குரல் கொடுத்தார். மேலும் டிக்டாக் ஆப்பினை தடை செய்வதை குறித்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்திச் சொல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய தமீமுன் அன்சாரி டெக்னாலஜி எப்போதும் ஆக்கப்பூர்வ சக்திக்காகவும் அறிவை வளர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும், ஆனால் டிக்டாக் அப்படித்தான் இருக்கிறதா? என்பதை நீங்களே உங்களை பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த ஆபாசத் தளத்தின் ஆபத்தை அனைவரும் உணர்ந்ததாலேயே இதைப் பற்றி யாரும் பேசாத நிலையில் தான் பேசியதாகவும், அதனாலேயே தனக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்ததாகவும் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமீமுன் அன்சாரி, தான் செய்த நல்ல விஷயத்தை நினைத்து சந்தோஷமடைவதாக கூறியுள்ளார்.

TIKTOK, TAMILNADU, VIRAL, TNGOVT

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES