‘ஒரே பிரசவசத்தில் 7 குழந்தைகள்’..சுகப்பிரசவமாக பெற்று அசத்திய பெண்!
Home > தமிழ் newsஈராக் நாட்டில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகப்பிரசவம் என்றாலே அதிசயமாக பார்க்கும் இன்றைய காலகட்டத்தில் கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை பெற்றுள்ளார். அதுவும் சுகப்பிரசவத்தில் என தெரிவித்திருக்கின்றனர்.
சமீபத்தில் 25 வயது பெண்ணை பிரசவத்துக்காக ஈராக் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அதில் அப்பெண்ணுக்கு அழகான 6 ஆண், 1 பெண் உள்ளிட்ட 7 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிறந்தது. பிரசவத்துக்கு பின் அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் 1997 -ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கென்னி-பாப்பே தம்பதிக்கு 4 ஆண், 3 பெண் உட்பட 7 குழந்தைகள் பிறந்தது. கடந்த நவம்பர் மாதம் இவர்கள் 7 பேரும் தங்களது 21 -வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பஸ் ஓட்டும்போது வந்த மாரடைப்பு.. சமயோஜித டிரைவர்.. உருகிப்போன 50 பயணிகள்!
- 'தாயின் கருவில் இருந்து குழந்தையை எடுத்து மீண்டும் உள்ளே வைத்த மருத்துவர்கள்' ..பதறவைக்கும் காரணம்!
- பலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா?.. சட்டசபையில் நடந்தது என்ன?
- இனி அத்தியாவசிய பொருட்களும் ஆன்லைனில்.. உணவு டெலிவரி நிறுவனம் அதிரடி!
- கொள்ளையனை பிடிக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்..பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு நடுக்கடலில் டெலிவரி.. அசத்தும் கம்பெனி!
- தாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- பெண்களை கவரும் ‘மோடி சேலை’..இணையத்தை கலக்கும் பிரதமர்!
- கும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ!
- ‘என்ன கேட்காம எதுக்கு பெத்த’.. பெற்றோர் மீது வழக்கு தொடரும் விநோத இளைஞர்!