'பிராண்ட் அம்பாசிடர், ஆலோசகர் தேவையில்லை'.. ஷேவாக்கைக் கைகழுவிய பஞ்சாப் அணி!
Home > தமிழ் newsகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் பதவியிலிருந்து, வீரேந்தர் ஷேவாக் விலகியுள்ளார்.
வீரர், ஆலோசகர் என சுமார் 5 வருடங்கள் பஞ்சாப் அணியில் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக்குக்கு அணி நிர்வாகம் விடை கொடுத்துள்ளது. இதுகுறித்து ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,''அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான். கிங்ஸ் லெவன் அணியுடன் நல்ல காலங்களை செலவழித்தேன். 2 சீசன்கள் வீரராக ஆடினேன், 3 சீசன்கள் ஆலோசகராக இருந்தேன். கிங்ஸ் லெவன் அணியுடனான எனது கூட்டுறவு முடிவுக்கு வருகிறது. அனைவருக்கும் நன்றி. அணிக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஷேவாக் அளித்த பேட்டியில்,''அணி உரிமையாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது, அதில் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆலோசகர் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதற்கும் பிரீத்தி ஜிந்தாவுக்கும் சம்பந்தமில்லை என்றே கருதுகிறேன். அவர்களின் முடிவுகளுக்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை,'' என தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இவர் என்ன பறவையா? இல்ல மனுஷனா?.. ஹைதராபாத் கேப்டனைப் புகழும் ரசிகர்கள்!
- Watch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!
- அனைத்து 'சர்வதேசப் போட்டிகளிலும்' இருந்து ஓய்வு பெறுகிறேன்: சிஎஸ்கே வீரர் உருக்கம்!
- ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- ஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்!
- Chennai Super Kings Fan Gets His Wedding Invitation Designed As A Match Ticket
- IPL 2019 Could Be Held Outside India; Here Are The Two Venues BCCI Has In Mind
- ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலியா? டிவில்லியர்ஸா?.. பெங்களூர் அணி விளக்கம்!