'இந்த விளையாட்டில் இவ்வளவு வருமானமா'....வெயிட்டாக சம்பளம் வாங்கும் வீரர்கள்!

Home > தமிழ் news
By |

விளையாட்டு போட்டிகளிலேயே ஐபியலில் பங்கேற்கும் வீரர்களுக்கு தான் அதிக சம்பளம் தரப்படுவதாக கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

 

2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.11 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து,அடுத்த வருடமும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் நேரத்தை வெளியிட்ட  பிசிசிஐ,வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் ஏலம் நடைபெறும் என அறிவித்திருக்கிறது.

 

இந்நிலையில் மற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை காட்டிலும்,ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரருக்கு,ஒரு போட்டிக்கு வழங்கப்படும் சம்பளம் பல மடங்கு அதிகம் என சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

உலகின் பணக்கார லீக் தொடரான இங்கிலீஸ் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 24 கோடி சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது.அதேநேரத்தில் வெறும் 14 போட்டியில் பங்கேற்க, ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 கோடி வழங்கப்படுகிறது.

 

இது கால்பந்து தொடர்களான என்.எப்.எல்  (சராசரியாக ரூ. 1.1 கோடி), பிரிமியர் லீக் (சராசரியாக 63.15 லட்சம்) தொடர்களில் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையைவிட அதிகமாகும். ஆனால் ஒரு சிசன் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால், கால்பந்து வீரர்கள் தான் பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS