'ஐ.பி.எல் ஏலம் வந்தாச்சு'...பிரைம் டைமை குறிவைக்கும் பிசிசிஐ:பங்கேற்க முடியாத வீரர்கள்!

Home > தமிழ் news
By |

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும்  ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.அதற்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 11 ஆண்டுகள் நடைபெற்றுவிட்டது.இந்நிலையில் 12வது ஆண்டாக அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.ஆனால் அடுத்த வருடம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருப்பதால்,இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.இதனால் 12வது தொடரை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என பிசிசிஐ பெரும் குழப்பத்தில் உள்ளது.

 

இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக நடத்துவதா அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே நடத்துவதா என்பது,தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் முழுமையாக தெரியவரும்.ஆனால் அந்நிய மண்ணில் போட்டிகளை நடத்துவது என்பது பிசிசிஐக்கு புதிதல்ல.கடந்த 2009 (தென் ஆப்ரிக்கா), 2014 (யு.ஏ.இ) என அந்நிய மண்ணில் பிசிசிஐ வெற்றி கரமாக நடத்தியுள்ளது.

 

இந்நிலையில் அடுத்த ஆண்டுநடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலமானது,வரும் டிசம்பர் 18ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது.குறிப்பாக ஏலத்தினை அனைவரும் பார்க்கும் விதமாக,பிரைம் டைம் என கருதப்படும் மதியம் 3 மணிக்கு துவங்கி, இரவு 9.30 மணி நடைபெற இருக்கிறது.

 

அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் போட்டியின் பாதியிலேயே  இங்கிலாந்து அணி வீரர்களும் செல்லலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.இதனால் ஏலத்தின் மற்ற அணி வீரர்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI, IPLOPENINGCEREMONY, CRICKET, IPL 2019, AUCTION, PRIME TIME

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS