திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு பறந்து பயம் காட்டிய விமானம்!

Home > தமிழ் news
By |
திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு பறந்து பயம் காட்டிய விமானம்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, பறப்பதற்கு முன்னர் அங்கிருந்து சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு பறக்கத் தொடங்கியதால் பரபரப்பு உண்டானது.

 

திருச்சியில் இருந்து, இன்று அதிகாலை சுமார் 1.20 மணிக்கு துபாய் புறப்பட்ட ஏர்- இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து130 பயணிகளுடன் சென்ற விமானத்தின் நிலை  குறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

எனினும் அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளதாகவும்,  துபாய் புறப்பட்ட விமானம் விமானம் பத்திரமாக துபாயில் தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்த பின்னரே பயணியரின் உறவினர்கள் நிம்மதியாகியுள்ளனர்.

TRICHY, AIRPORT, FLIGHT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS