ஆஸ்திரேலியாவுக்கு அருகே நடு கடலில் மாட்டிப் கொண்ட இந்திய கடற்படை அதிகாரி, பத்திரமாக மீட்கப்பட்டதாக பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோல்டன் க்ளோப் எனப்படும் படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார் கமாண்டர் டாமி. அப்போது தெற்கு இந்திய பெருங்கடலில் வீசிய புயல் காற்றால் அவரது படகு பாதிப்புக்கு உள்ளானது. இந்த விபத்தின் காரணமாக கமாண்டர் டாமிக்கும் முதுகுப் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாமி, குறுஞ்செய்தி மூலம் தனது நிலைமை குறித்து தகவல் தெரிவித்தார்.
அவரை மீட்பதற்கு இந்திய அரசு பலகட்ட முயற்சிகளை எடுத்து வந்தது. இதையொட்டி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் கப்பல் அவர் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்றது. ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு கப்பலானது கமாண்டர் டாமி இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்தது.இதன் காரணாமாக கமாண்டர் டாமியை மீட்பதற்கு முதற்கட்ட முயற்சியாக சிறிய படகு மூலம் அவருக்கான முதலதவியை அனுப்பியது ஓசிரிஸ்.
மீட்பு பணியில் இந்திய கடற்படை சார்பில் ஒரு கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் ஒரு கப்பலும் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலும் கமாண்டர் டாமியை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கமாண்டர் டாமி பத்திரமாக மீட்கப்பட்டதாகவும்,அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும்,இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் சத்புரா அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS