இந்த 'உமேஷ் யாதவ்வால' எங்களுக்குத்தான் தலைவலி.. புலம்பும் விராட் கோலி!

Home > தமிழ் news
By |

உமேஷ் யாதவ் நன்றாகக் பந்து வீசுவதால் தேர்வுக்குழுவினருக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளதாக, கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு உமேஷ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

 

இந்தநிலையில் கேப்டன் விராட் கோலி, உமேஷ் நன்றாகக் பந்து வீசுவதால் தங்களுக்கு (தேர்வுக்குழுவினர்) புதிய தலைவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,''ஷர்துல் விளையாட முடியாமல் போய்விட்டது. எனினும் தனி ஒருவனாகப் போராடி 10 விக்கெட்டுகளை உமேஷ் வீழ்த்தினார். இது எங்களுக்கு சந்தோஷம் தான்.தனது சிறந்த ஆட்டத்தால் முக்கிய நேரங்களில் உமேஷ் விக்கெட் எடுக்கிறார்.

 

அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. ஆனால் ஷமி, பும்ரா, புவனேஷ்வர் ஆகியோர் நன்றாகப்  பந்து வீசுகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய தொடருக்கு யாரைத்தேர்வு செய்வது? என்பது தேர்வுக்குழுவினருக்கு புதிய தலைவலியாக இருக்கும்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

CRICKET, VIRATKOHLI, UMESHYADAV

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS