Watch Video: 'பிரித்வி ஷாவை விட்டு விடுங்கள்'.. கேப்டன் விராட் கோலி காட்டம்!

Home > தமிழ் news
By |

இளம் வீரர் பிரித்வி ஷாவை விட்டு விடுங்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைப் பார்த்த பலரும் அவரை அடுத்த சச்சின், ஷேவாக் என பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் பிரித்வி ஷாவை வளர விடுங்கள் என, விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார். நாளை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியையொட்டி விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் ஹைதராபாத்தில் இன்று பேட்டியளித்தனர்.

 

அப்போது விராட் பேசுகையில்,''பிரித்வி ஒரு இளம் வீரர் அவரது ஸ்டைல் சச்சின், ஷேவாக் போல என யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர் இன்னும் நன்றாக விளையாட வேண்டும்.அவருக்கு நெருக்கடி அளிக்காதீர்கள்.முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட வேண்டும்.

 

உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமாக விளையாடி உள்ளதால், மிகத் திறமையாக சூழ்நிலைகளைக் கையாளும் திறன் அவருக்கு உள்ளது.அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

 

நாளை நடைபெறவிருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில், பிரித்வி ஷா சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

VIRATKOHLI, CRICKET, PRITHVISHAW

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS