இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் அபார சதத்தால், 274 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

 

முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில்  180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

 

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக, இந்திய அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும்  இழந்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

 

ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், கோலி உள்ளிட்ட 4 இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இங்கிலாந்துஅணியின் வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி(51) ரன்களைக் குவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS