இந்தோனேசியா: பெண்களுக்கான ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை கண்டிப்புடன்  வலியுறுத்தி வரும் மத மார்க்கங்களுள் முக்கியமானது இஸ்லாமியம். பல இடங்களில் முஸ்லீம் பெண்களுக்கான தனிமனித சுதந்திரங்களுக்கு இருக்கும் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், அண்மையில் ஃபர்தா அணிவது போன்றவற்றிற்கும் எதிரான முஸ்லீம் பெண்களின் சில போராட்டங்களும் வலுத்தன.


இந்நிலையில்தான்  இந்தோனேசியாவின் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில் பொது உணவகங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் இருவரும் ஒரு சேர ஒன்றாக சென்று உணவு அருந்துவதை அங்கிருக்கும் உள்ளூர் இஸ்லாமிய கட்டுப்பாடுகள் மறுக்கின்றன. பெண்களின் உடன் வரும் ஆணாகியவர் கணவர், அண்ணன், அப்பா என யாராக இருந்தாலும் இதுதான் விதி.  அதுமட்டுமல்லாமல், இரவு 9 மணிக்கு மேல், தனியாக வரும் பெண்ணுக்கு உணவு பரிமாறக் கூடாது என்கிற கட்டுப்பாடும் உள்ளது.


முன்னதாக 2013-ல் வட சுமத்ரா தீவுகளில் பைக்குகளில் அமர்ந்து செல்லும் பெண்கள் ஒருபக்கமாகத்தான் அமர்ந்து செல்ல வேண்டும் என்றும், சில இடங்களில் 11 மணிக்கு மேல் பெண்கள் கஃபே, விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்குக்காக எங்கும் தனித்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது ஆஸ்ச்சேவில் வந்திருக்கும் இந்த நடைமுறை அங்கிருக்கும் உணவகங்கள் கடைபிடிக்காவிடின், அவர்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது!

BY BEHINDWOODS NEWS BUREAU | SEP 6, 2018 3:28 PM #INDONESIA #ACEH #ISLATH #MUSLIMWOMEN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS