இந்தோனேஷியா விமான விபத்தில் உயிரிழந்த.... இந்திய பைலட்டின் நிறைவேறாத 'கடைசி ஆசை'

Home > தமிழ் news
By |

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் விமானம் ஒன்று, சுமத்ரா தீவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதில் விமானத்தின் பைலட் ஒரு இந்தியர் என்னும் விவரம் வெளியாகியுள்ளது.6 பேர் இருந்த விமானக் குழுவுக்கு, டெல்லியைச் சேர்ந்த கேப்டன் பாய்வே சுனேஜா என்பவர்  தான் தலைமை வகித்தார். இதுவரை 6,000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் சுனேஜாவுக்கு  உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த லியான் ஏர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடும் சுனேஜா  இந்த வருடமும் கண்டிப்பாக வருவதாக தனது குடும்பத்தினருக்கு வாக்கு அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்கினை நிறைவேற்ற முடியாமலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.

 

மேலும் தனது சொந்த ஊரான டெல்லிக்கு வந்து வேலை செய்யவேண்டும் என்ற தீராத ஆசையும், சுனேஜாவுக்கு இருந்துள்ளது. இதற்காக அவர் தீவிர முயற்சி செய்துவந்த வேளையில் இப்படியொரு துக்க சம்பவம் நிகழ்ந்து, சுனேஜா மட்டுமின்றி அந்த விமானத்தில் பயணம் செய்த 188 பேரின் கனவுகளையும் மரித்துப் போகச் செய்துவிட்டது.

INDIA, INDONESIAFLIGHTCRASH, BHAVYESUNEJA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS