ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் கோலகலமாக நடந்து வருகின்றன. கிழக்காசிய நாடுகளிடையே நிகழும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மும்முரமாக பதக்கங்களை வெல்வதற்கென தன் பயிற்சி வீரர்களை களத்தில் இறக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். இதன்படி, இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக டென்னிசில் இந்தியாவின் போபண்ணா-திவிஷ் சரண் ஜோடி தங்கம் வென்றிருந்தது. இந்நிலையில், இன்று நிகழ்ந்த ஆண்கள் கலந்துகொண்ட படகுப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த படகுப் போட்டி வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இதுவரை நடந்துவரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக, இந்திய நாட்டிற்கு 11 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதேபோல் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சராசரி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10வது பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சுதந்திர தினத்தையொட்டி வண்ணமயமான செங்கோட்டை!
- 2022ஆம் ஆண்டு முதல் பெட்ரோலுக்கான மாற்றுத் தீர்வு ... பிரதமர் மோடி!
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தெர்மல் பேட்டரி கார்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- ’இந்தியர்கள் உட்பட’.. ஒன்றரை லட்சம் மக்களை வெளியேறச் சொல்லும் மலேசியா!
- 'மன்னிச்சிடுங்கப்பா'.. ஆதார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்!
- 'அப்படித்தான் சூப்பர் மாமா'..அஸ்வினை தட்டிக்கொடுத்த தினேஷ் கார்த்திக்.. வைரல் வீடியோ!
- பெண்களுக்கு ஆபத்தான 'டாப் 10' நாடுகள்.. இந்தியாவின் இடம் இதுதான்!
- அமெரிக்க 'ஜெனரல் மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரியாக... 'சென்னை' பெண் நியமனம்!
- WhatsApp usage highest in India, say studies