என்ஜினே இல்லாமல் ஓடும் இந்தியாவின் அதிவேக ரயில்"ட்ரெய்ன் 18"...சென்னை ஐ.சி.எப் புதிய சாதனை!

Home > தமிழ் news
By |

இந்தியாவின் அதிவேக ரயிலான `ட்ரெய்ன் 18’ சென்னையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயிலை,சென்னையில் உள்ள ஐசிஎப் நிறுவனம் தயாரித்து சாதனை புரிந்துள்ளது. 

 

தற்போது வரை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சதாப்தி விரைவு ரயில் தான் இந்தியாவின் அதிவேக ரயிலாகும்.அதன் சாதனையை ட்ரெய்ன் 18 முறியடித்துள்ளது.சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக ட்ரெய்ன் 18 இந்தியாவின் அதிவேக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில்(ஐசிஎப்) இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த அதிவேக ரயிலின் அறிமுக விழா பெரம்பூரில் இன்று நடைபெற்றது.

 

ட்ரெய்ன் 18' ரயிலில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் காணப்படுகிறது.அதில் மிகமுக்கியமானது என்ஜினே இல்லாமல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்பது தான்.  இந்தியாவின் அதிவேக ரயிலான இது  சதாப்தி விரைவு ரயிலோடு ஒப்பிடும்போது,ட்ரெய்ன் 18னின்  பயண நேரம் 15% குறைவாக இருக்கும்.

 

மேலும் ரயிலில் மொத்தமுள்ள 16 பெட்டிகளில் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள் உள்ளன. இவற்றில் தலா 52 இருக்கைகளும், ஏனைய பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உயர்வகுப்பு ரயில் பெட்டிகளில் 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள் உள்ளன.

 

ட்ரெய்ன் 18 முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாகும். இந்த ரயிலில் வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தும் உறிஞ்சு கழிவறைகள், பரவலான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள், ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

பயணிகளின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில்களை போல, ரயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் சிக்கலின்றி பயணிக்கும் வகையில் இந்த ரயிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ICF, TRAIN 18, NEXTGEN SHATABDI, INTEGRAL COACH FACTORY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS