ஆஸ்திரேலிய மண்ணில் முழுமையான வரலாற்று வெற்றி.. அடித்து ஆடிய தோனி..முழுவிபரம் உள்ளே!

Home > தமிழ் news
By |

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி அடைந்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை லயன், பெகண்ட்ராஃப் ஆகியோருக்கு பதிலாக ஸ்டான்லேக் மற்றும் ஸம்பா சேர்க்கப்பட்டதும், இந்திய அணியை பொருத்தவரை சிராஜ், அம்பாட்டி ராயுடு மற்றும் குல்தீப் ஆகியோருக்கு பதிலாக விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சஹால் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்கிற விகிதத்தில் தொடரை சமன் செய்த நிலையில் இருந்தன. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டிக்காக மெல்போர்னில் மோதின.  இப்போட்டியில் இந்தியா வென்றால் முதல்முறையாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முழுமையான வெற்றி பெற்று நாடு திரும்பும் முதல் அணியாக இந்தியாவின் தற்போதைய அணி பார்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் இருந்தது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பிறகு ஹேண்ட்ஸ்கோம்ப் 58 ரன்களையும், மார்ஷ் 39 ரன்களையும் எடுத்திருந்ததை அடுத்து 48.4வது ஓவரில் 230 ரன்களுக்கு ஆஸ்திரேலியா  அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர்கள் சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் தங்களது சிறப்பான பந்துவீச்சுகளை கொண்டு வீழ்த்தினர்.

அடுத்து 231 ரன்கள் என்கிற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 30வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 113 ரன்கள்  எடுத்ததோடு, தோனி 35 ரன்களுடன் களத்தில் இருக்க, 46 ரன்கள் எடுத்த நிலையில், கோலியின் விக்கெட்டை ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்ஸன் கைப்பற்றினார்.  இதில் தோனி - கோலி இருவரும் சேர்ந்து 3 விக்கெட்டுக்குள் 54 ரன்கள் சேர்த்திருந்தனர்.

பிறகு 49.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதில் முன்னாள் கேப்டன் தோனி 87 ரன்களும் கேதர் ஜாதவ் 61 ரன்களும் எடுத்து அபாரமாக ஆடி,  ஆஸ்திரேலியாவில்  டி20 தொடரை சமன் செய்து 2-1 என்கிற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வெற்றிகொண்டுள்ளது.  இது ஒரு முழுமையான-அபாரமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

TEAMINDIA, CRICKET, AUSVIND, ODI, 3RDODI, MELBOURNE, MSDHONI, VIRATKOHLI, WINNING, AUSTRALIA, BCCI, ICC

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS