'அறிமுக போட்டியிலேயே மாஸ் காட்டிய இந்திய பௌலர்'...செம திரில்லிங்கான வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி!

Home > தமிழ் news
By |

இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரரின் அசத்தலான பௌலிங்கால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்,நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் 3 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகின்றன.இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.தற்போது ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியானது அபுதாபியில் நடைபெற்றது.

 

டாஸ் வென்ற  நியூசிலாந்து அணியின் கேப்டன் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 153 ரன்களில் ஆல் அவுட்டானது.தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து வந்த 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து 249 ரன்கள் எடுத்தது.

 

இந்நிலையில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 171 ரன்கள் மட்டும் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமaக இமாம் உல் ஹக் 27, அஜார் அலி 65, ஆஜாத் சஃபிக் 45 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொர்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

 

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பௌலர் அஜாஜ் படேல்.இவர் இந்தியாவின் மும்பையை பூர்விகமாக கொண்டவர்.அஜாஜ் படேல் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.அதேபோல்  2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி நியூசிலாந்து அணியினை வெற்றிக்கு அழைத்து சென்றார்.நியூசிலாந்து அணியின் த்ரில் வெற்றிக்கு காரணமாக அமைந்த பௌலர் அஜாஜ் படேலிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

CRICKET, PAKISTAN, NEW ZEALAND, AJAZ PATEL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS