‘பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலுக்கு பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி’..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

புல்வாமா தாக்குதலுகு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர், தன்னிடம் கைகுலுக்க வந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு, கைகுலுக்க மறுத்து வணக்கம் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்தன.

இதனை அடுத்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடக் கூடாது என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தீபக் மிட்டல் மற்றும் பாகிஸ்தான் சார்பாக அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான் கலந்து கொண்டனர். வழக்கு தொடங்குவதற்கு முன்பாக இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது பாகிஸ்தான் சார்பாக வந்த அன்வர் மன்சூர் கான், இந்திய அதிகாரி தீபக் மிட்டலுக்கு கைக்குலுக்க கையை நீட்டினார். ஆனால் தீபக் மிட்டல் கை கொடுக்க மறுத்து கை கூப்பி வணக்கம் வைத்தார். புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பதிலடி கொடுத்த இந்திய அதிகாரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PULWAMATERRORATTACK, ICJ, KULBHUSHANJADHAVCASE, VIRAL, DEEPAKMITTAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS