'டி-20 போட்டியில் விளையாடணும்னு சூசகமா சொல்றாரோ?'.. ஆஸி போட்டிக்கு பிறகு பேசிய வீரர்!

Home > தமிழ் news
By |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர்களில் 2-1 என்கிற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  கடந்த 72 வருடங்களில் இல்லாத வரலாற்று சாதனையாக ஆஸ்திரேலியாவை, ஆஸ்திரேலிய மண்ணில் இந்த டெஸ்ட்டில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

 

இதற்கு விராட் கோலியின் தலைமையும் புஜாராவின் ஆட்டமும் பெரிதும் உதவின என்று சொல்லலாம். இந்த டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, பேசிய புஜாரா ‘இது ஒரு சிறந்த அணி, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு எதிராக விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியதற்கு உதவியது. அது அத்தனை சுலபமும் அல்ல. ஒரு பேட்ஸ்மேனாக வேகப்பந்துகளையும் பவுனசர்களையும் எதிர்கொள்ள வேண்டும். 4 பந்து வீச்சாளர்களைக் கொண்டு இத்தனை ஓவர்களை சமாளித்து 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணம் அல்ல’ என்று கூறினார்.

 

மேலும் பேசியவர் அடுத்த 7 மாதங்களில் வரவிருக்கும் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்கு தன்னை தயார் செய்து கொண்டிருப்பதாக கூறிய புஜாரா, இந்தியாவை தவிர்த்து சிறப்பாகவும் தனித்துவமாகவும் தன்னால் ஆஸ்திரேலியாவில் விளையாட முடிந்ததாகக் கூறியுள்ளார். 

 

அதுமட்டுமல்லாமல் வெள்ளைப் பந்தில் விளையாடுவதற்கு கடுமையாக பயிற்சி பெறுவேன் என்றும், அதே சமயம் தனக்கு முக்கியமான டெஸ்ட் கிரிக்கெட்டையும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் வெள்ளைப் பந்து என்பது டி20 போட்டிகளில் பயன்படுத்தும் பந்து என்பதால் சூசகமாக, டி20 போட்டிகளில் விளையாடவேண்டும் என்கிற தனது விருப்பத்தைத்தான் இவ்வாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

CRICKET, BCCI, AUSVIND, PUJARA, VIRATKOHLI, TESTSERIES, T20

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS