இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான  சஞ்சு சாம்சன் தனது கல்லூரிக் கால தோழியை மணக்க இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 5 ஆண்டுகள் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்து இறுதியாக சம்மதம் கிடைத்தவுடன், காதலியை மணக்க இருப்பதாக அறிவித்துள்ள சஞ்சு, இந்தியாவிற்காக ஒரேயொரு டி20 போட்டியில்  விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேரளாவை சேர்ந்த இளம் வீரரான இவரின் திருமணம் டிசம்பர் 22ம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.மேலும் தனது காதலை பற்றியும் தனது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தது குறித்தும் முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில்,‘எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, தனது காதலி  குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமை காத்து வந்தேன். எப்போது நாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் நாங்கள் காதலர்களாக இருந்தாலும், பொது இடங்களில் ஒன்றாக சென்றது இல்லை.இப்போது இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். ரசிகர்கள் தங்களின் இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்,'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

BY JENO | SEP 10, 2018 11:43 AM #CRICKET #INDIAN CRICKET #SANJU SAMSON #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS