நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 352 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

 

முதல் இன்னிங்ஸில் 97, இரண்டாவது இன்னிங்ஸில் 103 என மொத்தம் 200 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேசுகையில், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை சமர்பிப்பதாக கூறினார்.

 

இந்த நிலையில் போட்டி முடிந்து ஹோட்டலிற்கு செல்லும் வழியில் ஏராளமான ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக முண்டியடித்து கொண்டிருந்தனர்.

 

அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் "விராட் பிச்சர் ப்ளீஸ்" என்று நிறுத்தாமல் கத்திக்கொண்டே இருந்தான்.இதனால் அவன் பக்கத்தில் வந்த விராட் அந்த சிறுவனோடு செல்ஃபி எடுத்து கொண்டார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

BY JENO | AUG 23, 2018 1:44 PM #VIRATKOHLI #CRICKET #SELFIE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS