செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த தம்பதியர் மரணத்தில் ‘அதிரவைக்கும்’ திருப்பம்!

Home > தமிழ் news
By |

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில், உயரமான மலையில் நின்று செல்ஃபி எடுத்த போது அங்கிருந்து விழுந்த கேரள தம்பதியரின் மரணம் பலரையும் உலுக்கியது. இந்நிலையில் அவர்கள் இருவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த டாக்டர்களான விஸ்வநாதன்,சு காசினி தம்பதியரின் மகனான விஷ்ணு, செங்கானுரிலுள்ள ஒரு கல்லுரியில் எஞ்சினீயரிங் படித்தார். இவர் தன்னுடன் படித்த கோட்டயத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரை காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன், குருவாயூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் இருவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு வேலை செய்துகொண்டே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இருவரும் சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும் உயரமான இடங்களுக்கு சென்று செல்ஃபி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர்கள் எடுத்த செல்ஃபிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், தங்களது பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியும் வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மத்திய கலிபோர்னியாவிலுள்ள உயரமான மலைகளையும் அருவிகளையும் உடைய யாஸ்மிடே தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர்.  இப்பகுதியில் மிக உயரமாக உள்ள ஒரு மலையின் மீது ஏறி சுற்றிப்பார்த்துள்ளனர். பின்னர் மலை உச்சியின் ஓரத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்துள்ளனர். இதில் அவர்களின் உடல்கள் சிதைந்து இருவரும் உயிரிழந்தனர்.

தற்பொழுது அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. போதையில்தான் தவறி விழுந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் எண்ணுகின்றனர். மேலும் மலையிலிருந்து கீழே விழுந்ததில் தலை, கழுத்து, மார்பு, அடிவயிறு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BIZARRE, SELFIES, KERALA, AMERICA, COUPLES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS