'பலியான சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தங்கப்பதக்கம்'.. நெகிழவைத்த குத்துச்சண்டை வீரர்கள்!

Home > News Shots > தமிழ் news
By |

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு, இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தாங்கள் வென்ற தங்கப் பதக்கங்களை சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பல்கேரியாவில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் பல்வேறு வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் தங்கம் வென்றார். மேலும் இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள் முதல்முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தத் தொடரின் முடிவில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதனை அடுத்து தனது தங்கப் பதக்கத்தை, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக குத்துச்சண்டை வீராங்கனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கலும் தனது தங்கப் பதக்கத்தை வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

PULWAMATERRORATTACK, CRPFJAWANS, BOXING, NIKHATZAREEN, AMITPANGHAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES