2019 முதல் 1 நொடிக்கு 100 ஜிபி வரை அதிவேக இண்டர்நெட்டுக்கு வாய்ப்பு!

Home > தமிழ் news
By |

இணையதள நுகர்வோர் பயன்பாட்டில் முதன்மையான இடங்களில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இணையம் வேகத்தை பொறுத்தவரை இந்தியா 109-வது இடத்தில் உள்ளது.

 

எவ்வளவுதான் நெட்பேக் போட்டாலும், அதிவேகமாக இணையம் செயல்படாததால், நாம் பயன்படுத்தும் முன்னரே டேட்டா பேக் காலாவதி ஆகிவிடுகிறது.  ஆனால் இந்த சிக்கல் எல்லாம் 2019-ம் ஆண்டுக்குள் சரியாகி, ஒரு நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு ஆகும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கூறிய அவர், ‘இந்தியா ஜிசாட்-19 என்கிற செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அடுத்து நவம்பரில் ஜிசாட்-29 ஐயும் டிசம்பரில் ஜிசாட்-11 ஐயும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜிசாட்-20 ஐயும் அனுப்ப உள்ளது. இதனால் இணையம் அதிவேகமாக செயல்பட வாய்ப்புள்ளதால் ஒரு நொடிக்கு 100 ஜிபி வரை டவுன்லோடு செய்யும் அளவிற்கு இணையத்தை பயன்படுத்த முடியும்’ என்று கூறியுள்ளார்.

INTERNET, NETWORK, INDIA, DIGITALINDIA, SHIVAN, ISRO, DATA, SPEED, 3G, 4G, INTERNETSPEED, 100GBPERSECOND

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS