உலககோப்பையில் பாகிஸ்தானுடன் போட்டி நடக்குமா?...நடக்காதா?...ஐசிசி சிஇஓ வெளியிட்ட தகவல்!

Home > தமிழ் news
By |

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து,வரும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூட இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.நாடுதான் முதலில் மனதில் வர வேண்டும் எனவும்,நிச்சயமாக இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என கடுமையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி ரத்தாவது குறித்து எந்த பேச்சும் எழவில்லை எனவும்,போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் சூழ்நிலையே நிலவுவதாக ஐசிசி சிஇஓ ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழ்நிலையில் ரிச்சர்ட்ஸனின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ''தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.ஆனால் அதனை விளையாட்டோடு பொருத்தி பார்க்க கூடாது.மேலும் இந்தியா 1999 உலகக் கோப்பையில் கார்கில் போரின் போதும் கூட,பாகிஸ்தானுடன் ஆடியதையும் நினைவு கூர்ந்தார்.

எனவே உலககோப்பை போட்டியின் போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதில் எந்த பிரச்னையும் எழாது என,கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS