இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம் வீரர் ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக களம்  இறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்த ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் நடந்துகொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போட்டியின் போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஹூக் ஷாட் முறையில் ஹனுமா சிக்ஸராக மாற்றினார்.இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓவர் முடிந்தவுடன் ஸ்டோக்ஸ் அவருடன் வம்பில் ஈடுபட்டு, கடுமையாக பேசினார். தொடர்ந்து இந்திய கேப்டன் கோலி தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமா,''இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும்.இதற்காக என்னை சிறுவயதில் இருந்தே நான் தயார்படுத்திக் கொண்டேன்.முதல்முறையாக இந்திய அணியில் விளையாடுவதென்பது எனக்கான மிகப்பெரிய கௌரவமாகும்.டெஸ்ட் போட்டியில் நான் முதன் முதலில் களமிறங்கிய போது  எனக்கு விராட் கோலியின் அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு மறுமுனையில் ஆடிய விராட் கோலி அவ்வப்போது எனக்கு டிப்ஸ் அளித்துக்கொண்டே இருந்தார்.

 

பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் நான் சிக்ஸர் அடித்தவுடன், அவர் என்னிடம் வந்து வாக்குவாதம் செய்தார். அதை நான் தவிர்க்க முயன்றும் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து விராட் கோலி தலையிட்டுக் கேட்டபோது, ஸ்டோக்ஸ் விலகிச் சென்றார். பதற்றமாக இருந்த எனக்கு அந்த நேரத்தில் விராட் ஊக்கமளித்தார்.இதனால் தொடர்ந்து விளையாடுவதற்கு அவரின் வார்த்தைகள் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது,''என்றார்.

BY JENO | SEP 11, 2018 12:09 PM #VIRATKOHLI #CRICKET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS