'நீங்க வந்தா மட்டும் போதும்'...இந்திய அணி கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செய்த செயல்!

Home > தமிழ் news
By |

பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா விளையாட மறுத்ததால், இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

 

ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே ’எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை’ என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த தொடரில், பாதுகாப்பு காரணம் கருதி பங்கேற்க இயலாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு,எமர்ஜிங் நேஷன்ஸ் கிரிக்கெட் தொடருக்காக கராச்சி அல்லது லாகூருக்கு இந்திய அணியை அனுப்ப இயலாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆகையால் இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும். தொடரின் இறுதிப் போட்டியையும் கொழும்பு நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இந்த தொடரில் வங்கதேசம், யு.ஏ.இ, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் ஒரு அணியாக இருக்கின்றன. மற்றொரு அணியில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.இந்த தொடரின் 3 போட்டிகள் கராச்சியின் தேசிய மைதானத்திலும், 3 போட்டிகள் பாதுகாப்புத் துறையின் சவுத் எண்ட் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறுகிறது.

 

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக வரும் டிசம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை கராச்சியில் தங்கவுள்ள கிரிக்கெட் அணிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

CRICKET, PAKISTAN, BCCI, SRILANKA, EMERGING NATIONS CUP

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS