இந்த  நிதியாண்டு இறுதிக்குள் 5 நதிகளை இணைப்பதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் கடுமையான உயிர் சேதங்கள் ஏற்பட்டது. இத்தகைய பேரிடர்களைக் கருத்தில் கொண்டு  நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க அரசு உத்தேசித்திருந்தது.


இந்நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசினார். கடந்த சில ஆண்டுகளாக பெய்த கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ரூ.58,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலக வங்கியின் நிதியுதவியுடன் முதல்கட்டமாக 5 நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதற்கான திட்டப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோதாவரி - காவிரி, கென் - பேட்வா, ஜோகிக்ஹோபா - தீஸ்தா - ஃபராக்கா, தாபி - நர்மதை, தாமன் கங்கை - பின்ஜல் ஆகிய 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை முதல்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 

மொத்தமாக  ரூபாய் 5.5 லட்சம் கோடி செலவில் நாடு முழுவதும் 60 நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

BY JENO | AUG 7, 2018 11:45 AM #RIVER #RIVER LINKING PROJECT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS