'இது தான் மரண கதறலா'...ஆஸ்திரேலிய வீரர்களை தெறிக்க விட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அதன் பின்பு ஒரு நாள் மற்றும்  டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்நிலையில் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

 

‘பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி,முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.கோலி (47), புஜாரா (68) அவுட்டாகாமல் நிதானமாக ஆடி வந்தனர்.ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

 

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை அதிரடியாக தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். தேநீர் இடைவேளைக்கு பின், இந்திய அணி,முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் எடுத்திருந்தது.

 

தொடர்ந்து வந்த ரகானே மற்றும் பண்ட் ஆகியோரால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.இதனால் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தார்கள்.மறுபக்கம் அதிரடியாக ஆடிய ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.இதனை தொடர்ந்து,இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.இந்திய அணியின் அதிரடியான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய வீரர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

VIRATKOHLI, INDIA VS AUSTRALIA, ROHIT SHARMA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS