கேப்டன் கோலிக்கு ஓய்வு  அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது.

 

செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா,பாகிஸ்தான், வங்காள தேசம், ஹாங்காங், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 6 அணிகள் மோதவுள்ளன.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காள தேசம் அணி இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது.

 

இந்தநிலையில் கோலி இல்லாமல் களம் இறங்குவது குறித்து இந்திய வீரர் அம்பாதி ராயுடு கூறுகையில், ''அணியில் விராட் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. எனினும் இந்திய அணியால் ஆசியக்கோப்பையில் சாதனை படைக்க முடியும். அதுதான் இந்தியாவின் கேப்டன் தோனி இருக்கிறாரே,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS